இந்திய பொதுத் தேர்தல் வரை வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்படாது
இந்தியா வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால், வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 50 சதவீதம் வரை குறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
39 – 40 இந்திய ரூபாயாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை தற்போது 20-21 இந்திய ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை
இதேவேளை அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா அதிகாரபூர்வமாக தடை விதித்துள்ளது.
ஆனால் அடுத்த இந்திய பொதுத் தேர்தல் வரை தடை நீக்கப்படாது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையால், இந்தியாவில் வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்தாலும், ஆசிய மக்கள் இதனால் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் வெங்காயத்தின் விலை உயர்வு
குறித்த தடை காரணமாக ஆசியாவில் வெங்காயத்தின் விலை வேகமாக உயர்ந்துள்ளதாகவும் இதன் காரணமாக ஆசிய மக்கள் அதிகளவு காய்கறிகளை கொள்வனவு செய்ய தூண்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் கடந்த சில நாட்களாக வெங்காயம் உட்பட மரக்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.