;
Athirady Tamil News

Bank Account -ற்கு தவறுதலாக Credit ஆன ரூ.820 கோடி.., வெளிவந்த காரணம்

0

பொதுத்துறை வங்கியில் இருந்து வங்கிக்கணக்கிற்கு தவறுதலாக ரூ.820 கோடி கிரெடிட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.820 கோடி Credit
பொதுத்துறை வங்கியான UCO -ல் இருந்து வங்கிக்கணக்கிற்கு தவறுதலாக கிரெடிட் செய்யப்பட்ட ரூ.820 கோடியில் ரூ.705.31 கோடி வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கரத் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி பரிமாற்ற தவறுக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருந்ததும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். UCO வங்கியில் தவறான பணப்பரிமாற்றம் காரணமாக சுமார் 41,000 UCO வங்கிக்கணக்கிற்கு ரூ.820 கோடி நிதி கிரெடிட் ஆனது. வங்கியின் IMPS பேமெண்ட் சேனலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இந்த தவறு நடந்துள்ளது.

ரூ.705.31 கோடி மீட்பு
சமீபத்தில் மக்களவையில் பேசிய அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கரத், “UCO வங்கிக் கணக்குகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரூ.820 கோடி தவறுதலாக கிரெடிட் செய்யப்பட்டது. இதில் ரூ.705.31 கோடி மீட்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ.114.60 கோடியை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக UCO வங்கி தனது 2 சப்போர்ட் எஞ்சினியர்ஸ் மற்றும் பிற அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக கடந்த நவம்பர் 15 -ம் திகதி சிபிஐ-யில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

இதனால், கடந்த டிசம்பர் 5 -ம் திகதி மேற்கு வங்கம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள சுமார் 13 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.

இந்த சோதனையின் மூலம் மொபைல் ஃபோன்கள், லேப்டாப்கள், கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ், இ-மெயில் டாக்குமென்ட்ஸ், டெபிட்/கிரெடிட் கார்டுகள் போன்ற ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டது” என்று கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.