;
Athirady Tamil News

இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி: 20 சதவீதமாக அதிகரிக்கும் பொருட்களின் விலைகள்

0

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VAT திருத்தச் சட்டம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, தொலைபேசிகள், சோலார் பேனல்கள், பிக்மி (Pick me) மற்றும் ஊபர் (Uber) போக்குவரத்து சேவைகள், எரிபொருள் மற்றும் தங்க நகைகள் முக்கிய இடத்தைப் பெறும் என்று கூறப்படுகின்றது.

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி
எவ்வாறாயினும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக நாட்டில் எரிபொருளின் விலையில் பாதிப்புகள் ஏற்படாது எனவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் (காற்று/சூரிய சக்தி) மின்சார உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பேசப்பட்டாலும், சோலார் பேனல் ஒன்றின் விலை இரண்டு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படும் என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நழுவப்போவதாகவும், அடுத்த ஆண்டும் அதிக விலையுள்ள எரிபொருள், நிலக்கரி போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டிய நிலையே ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.