ஹமாஸ் ஆயுதங்களை கீழே போடவேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச சட்டத்தின்படி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமைக்கு ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் அமைச்சரிடம் பேசிய ட்ரூடோ
காசாவில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் ட்ரூடோ, அதே நேரத்தில் இஸ்ரேலுக்கும் தனது ஆதரவினை தெரிவித்து வருகிறார்.
முன்னதாக பாலஸ்தீன மக்களை புலம்பெயர்ந்தோராக ஏற்க அவர் மறுத்தார். இந்த நிலையில் இஸ்ரேல் அமைச்சர் பென்னி கான்ட்ஸ் (Benny Gantz) உடன் ஜஸ்டின் ட்ரூடோ உரையாடியுள்ளார்.
கனடாவின் ஆதரவு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘சர்வதேச சட்டத்தின்படி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமைக்கு கனடாவின் ஆதரவை பென்னி கான்ட்ஸ் உடன் பேசும்போது நான் மீண்டும் வலியுறுத்தினேன்.
En m’entretenant avec @GantzBe aujourd’hui, j’ai réitéré l’appui du Canada au droit d’Israël de se défendre conformément au droit international. J’ai aussi souligné l’importance de protéger les civils et d’assurer l’accès sans entraves de l’aide humanitaire aux civils à Gaza.
— Justin Trudeau (@JustinTrudeau) December 22, 2023
பொதுமக்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதையும் வலியுறுத்தினேன்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது பதிவில், ‘நிரந்தரமான போர்நிறுத்தத்திற்கான அவசர முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன், அது ஒருதலைப்பட்சமாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டேன். ஹமாஸ் பொதுமக்களை கேடயங்களாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும், ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் மற்றும் காசாவின் நிர்வாகத்தில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை’ என கூறியுள்ளார்.