வெளிநாடொன்று தனது மக்களுக்கு வழங்கிய அற்புதமான நிவாரணம்
மக்கள் மீதான நிதி அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில், நைஜீரிய அரசாங்கம் பண்டிகைக் காலங்களில் அதன் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பண்டிகைக் காலங்களில் நாடு முழுவதும் இலவச தொடருந்து பயணத்தை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளதுடன், பேருந்து கட்டணமும் 50% குறைக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் தங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் சொந்த ஊர்களுக்கு மன அழுத்தம் அல்லது அதிக போக்குவரத்து செலவுகள் இல்லாமல் செல்ல வாய்ப்பளிப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்று நாட்டின் கனிம வள மேம்பாட்டு அமைச்சர் கூறுகிறார்.
அரசின் தீர்மானம்
நைஜீரிய அதிபரின் தலையீட்டால், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துக் கட்டணங்கள் மற்றும் இலவச தொடருந்து பயணத்திற்கான சலுகைகள் நேற்று முதல் ஜனவரி 4ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து கட்டணத்தை கணிசமாகக் குறைத்து தொடருந்தில் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்குத் தீர்மானித்தது தமது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் விளைவாகும் என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விசேட அம்சம்
இதன் மூலம் சாமானியர்களும் அதிக போக்குவரத்து செலவு இல்லாமல் பயணம் செய்ய முடியும் நாடு முழுவதும் 22 வழித்தடங்களில் சொகுசுப் பேருந்துகளை இயக்கும் நிறுவனங்களுடன் கூட்டாகச் செயல்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பஸ் சங்கங்களும் கட்டண மானியம் வழங்க இணங்கியுள்ளமை விசேட அம்சமாகும்.
டிசம்பர் பொதுவாக நைஜீரியாவில் சுற்றுலாவிற்கு மிகவும் பரபரப்பான மாதமாக அறியப்படுகிறது.