திடீர் மின்வெட்டு! மின்சக்தி அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை
நாட்டில் எதிர்வரும் வார விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ x தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதேவேளை அவசர பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
மக்களிடம் இருந்து முறைப்பாடுகள்
பராமரிப்பு நோக்கங்களுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடர்பில் சர்வதேச வழிகாட்டுதல்களின்படி செயற்படுவதற்கு அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மின்சார கட்டணக் குறைப்பு
வார இறுதியில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற பராமரிப்பு பணிகளால் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக பாரிய செலவுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஜனவரி 15 ஆம் திகதி மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள் வழங்கப்படும் என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Instructions have been issued to CEB to suspend all planned power interruptions for non essential maintenance work on weekends & during the holiday season maintaining an uninterrupted supply of power.
New guidelines will be issued by GM CEB, in par with the international…
— Kanchana Wijesekera (@kanchana_wij) December 22, 2023