24 மணிநேரத்தில் காசாவில் 201 பேர் மரணம்! தீவிரமான இஸ்ரேலிய தாக்குதல்
இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 201 பேர் பலியாகினர்.
முகாம் மீது தாக்குதல்
காசாவின் Bureij-யில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில், குண்டுவீச்சு தாக்குதலில் குழந்தைகள் உட்பட குறைந்தது 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
அதே நேரத்தில் Jabalia முகாம் மீதான மற்றொரு தாக்குதலில் டசன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேலிய படைகளால் காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 201 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 370 பேர் காயமடைந்துள்ளனர்.
உயர்ந்த பலி எண்ணிக்கை
இதன்மூலம், 11 வார தாக்குதலில் காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,258 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 53, 688 ஆகவும் உயர்ந்துள்ளது என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஆயிரக்கணக்கானவர்களின் இறந்த உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதுதொடர்பாக அல் ஜஸீராவின் Tareq Abu Azzoum வெளியிட்ட அறிக்கையில், ‘காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல் மிகவும் தீவிரமாகிவிட்டன. இந்தப் பகுதிகளில் நிலத்தில் பல நாட்கள் சண்டையிட்டு இறந்த உடல்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், பிரதேசத்தின் வடக்குப் பகுதிகளில் குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதல்கள் தொடர்கின்றன’ என தெரிவித்துள்ளார்.