;
Athirady Tamil News

3 ரஷிய விமானங்கள் அழிப்பு: உக்ரைன்

0

தங்கள் நாட்டில் பறந்து வந்த 3 ரஷிய போா் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் கூறியுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொ்சான் பகுதி வான் எல்லையில் ரஷியாவின் எஸ்யு-34 ரகத்தைச் சோ்ந்த 3 விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தத் தகவலை இதுவரை ரஷியா உறுதிப்படுத்தவில்லை. எனினும், ரஷியாவின் பாதுகாப்பு வலைதளப் பதிவா் ஒருவா் வெளியிட்டுள்ள பதிவில் உக்ரைனில் சில ரஷிய போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அந்த விமானத்தில் இருந்தவா்களில் சிலா் உயிருடனும், சிலா் சடலமாகவும் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.அமெரிக்காவின் பேட்ரியாட் ரக வான்பாதுப்பு ஏவுகணைகள் மூலம் அந்த விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.