;
Athirady Tamil News

34,000 இணையக் கணக்குகள் முடக்கம், 6,300 பேருக்கு தண்டனை: சீனா அதிரடி

0

சீனாவில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சமூக ஒழுங்கை நிலை நாட்டும் முயற்சியில் பாதுகாப்பு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் இதுவரை வதந்திகளைப் பரப்பிய குற்றத்தின் கீழ் 34,000 இணையக் கணக்குகள் முடக்கப்பட்டு 6,300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 4,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சீன பொது பாதுகாப்பு அமைச்சக அதிகாரி லி டாங்க் தெரிவித்துள்ளார்.

‘இணையத்தில் தவறான தகவல்களைப் பரப்பி சமூக ஒழுங்கை, அமைதியை கெடுக்க முயற்சிக்கும் இணைய கணக்குகளை முடக்கியுள்ளோம். இந்த நடவடிக்கைகள் நல்ல பலனை அளிக்கும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-ல் இணையவழியாக நடக்கும் வன்முறைகள், குற்றங்கள், இழிவுபடுத்துதல், தனிப்பட்ட விபரங்களை திருடுதல் போன்றவற்றுக்கு எதிராக சீன காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுவரை 110 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.