யாழ்.சிறைச்சாலைக்குள் கைக்கலப்பு – ஒருவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற கைக்கலப்பில் கைதியொருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இரண்டு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியதில் 30 வயதான கைதி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.