வெளிநாடொன்றில் பயங்கர வெடி விபத்து: 13 பேர் பலி
இந்தோனேசியாவின் சுலவேசியில் உள்ள நிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீன நிறுவனத்திற்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 இந்தோனேசிய பிரஜைகளும் 5 சீன பிரஜைகளும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முதற்கட்ட விசாரணை
வெடிப்புடன் ஏற்பட்ட தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, பழுதுபார்க்கும் பணியின் போது இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இழப்பீடு
மேலும், அருகில் இருந்த ஒட்சிசன் சிலிண்டர்களும் வெடித்துள்ளமையால் தீக்கு எரியூட்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தோனேசிய அரசியல்வாதியும் தொழிலாளர் ஆர்வலருமான சைட் இக்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் விபத்து இழப்பீடுக்கான செலவுகளை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.