;
Athirady Tamil News

கனேடிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாரிய பின்னடைவு

0

கனடாவில் பணவீக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பண்டிகைக் காலத்தில் கனேடியர்கள் தங்களது செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சில கனேடியர்கள் நத்தார் மற்றும் புத்தாண்டு கால வழமையான செலவுகளை வரையறுத்துக் கொண்டுள்ளனர்.

அத்துடன், உறவினர்கள நண்பர்களுக்கு வழங்கப்படும் விருந்துகளும் குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலை
இதேவேளை, ஆறு பேரைக் கொண்ட குடும்பமொன்றின் மரபு ரீதியான கிறிஸ்மஸ் இராப் போசன விருந்துபசாரத்திற்கு சராசரியாக 104.85 டொலர்கள் தேவைப்படும் என குறிப்பிடப்படுகிறது.

மேலும், அண்மைக்காலமாக கனடாவில் உணவு வங்கிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றமையினை அவதானிக்க கூடியதாகவே உள்ளது.

அத்துடன், கனடாவில் மாகாணத்திற்கு மாகாணம் உணவுப் பொருட்களின் விலைகளில் பாரியளவு மாற்றங்கள் பதிவாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.