;
Athirady Tamil News

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

0

டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா வைரஸின் ஏ மற்றும் பி வகைகள் தற்போது நாடு முழுவதும் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கோவிட்-19 தொற்று நோய் பரவியுள்ள காலப்பகுதியில் பின்பற்றப்பட்ட வேண்டிய சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது முக்கியம் எனவும் சுகாதாரத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு, சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல்
எனவே காய்ச்சல் ஏற்பட்டால் டெங்கு பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, JN1 எனப்படும் கோவிட் மாறுபாடுடன் குழந்தைகளிடையே தற்போது பல சுவாச நோய்கள் பரவி வருவதாகவும், இந்த நாட்களில் இருமல் அல்லது சளி இருந்தால், முகக்கவசங்களை அணியுமாறும் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.