சிறிலங்கா கிரிக்கெட் மீதான தடை நீக்கம்: சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள்
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை விரைவில் நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அனுப்பிய இரண்டு கடிதங்களின் அடிப்படையில் இந்த தடை நீக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை விளையாட்டு சட்டத்தின் கீழ் கிரிக்கெட் அரசியலமைப்பை பாதுகாக்கும் வகையில் தற்போதுள்ள சட்டங்களை மீறாத பின்னணியில் கிரிக்கெட் மீதான தடையை நீக்குமாறு அமைச்சர் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
விரைவில் தடை நீக்கம்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை ரத்து செய்து இடைக்கால குழுவை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை விளையாட்டுத்துறை அமைச்சர் ரத்து செய்தது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எழுத்து மூலம் கிரிக்கெட் அமைப்புகளுக்கு அறிவித்துள்ளது.
இரண்டு கடிதங்களும் சபையின் அடுத்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன, அங்கு தடை நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.