பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் நடைமுறையாகும் சட்டம்
பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் அதிக இரைச்சல் காரணமாக வானொலி ஒலிபரப்புக்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பேருந்துகளில் அதிக சத்தம் எழுப்புவதால் பயணிகள் அவதிப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பேருந்துகளால் ஏற்படும் ஒலி மாசுபாட்டை குறைக்க மத்திய சுற்றுச்சூழல் ஆணையமும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் இணைந்து எதிர்காலத்தில் ஒழுங்குமுறை திட்டத்தை தயாரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
அதிக சத்தம் கொண்ட பேரூந்துகளில் உள்ள வானொலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திறன் போக்குவரத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.