;
Athirady Tamil News

அகழியில் பாலஸ்தீனர்களின் உடல்கள்… உறைய வைக்கும் படங்கள்!

0

போரின் காட்சிகள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. வடக்கு காஸாவில் பலியான பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல், காஸாவின் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது.

சிதைந்த மற்றும் முழு உடல் சடலங்கள் ராபா எல்லையில் அடக்கம் செய்யப்படுவதற்காக டிரக்கில் எடுத்து வரப்பட்டுள்ளன.

நீண்ட அகழி போல தோண்டப்பட்ட குழியில், நீல நிற பையில் அடைக்கப்பட்ட உடல்கள் அடுக்கப்படும் படங்களை அசோசியேட் பிரஸ் வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 240 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 20,915 ஆக உயர்ந்துள்ளது.

நான்காவது முறையாக தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு காஸா பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது.

அக்.7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள், வெளிநாட்டவர்கள் பலியாகினர். 240 பேர் ஹமாஸால் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களில் 110 பேர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்கள் ஹமாஸின் பிடியில் உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.