;
Athirady Tamil News

இறந்த சிறுவர்களின் உடலை உப்பில் புதைத்த பெற்றோர்.., மீண்டும் உயிர் வரும் என நம்பி ஏமாற்றம்

0

இறந்த சிறுவர்களின் உடலை உப்பில் புதைத்தால் உயிர் வரும் என்பதை நம்பி, உடல்களை உப்பில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் மரணம்
கர்நாடகா மாநிலம், ஹாவேரி மாவட்டம் படாகி தாலுகாவில் உள்ள கலபுஜே கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 24 -ம் திகதி நாகராஜா லங்கேரா(11), ஹேமந்த ஹரிஜன்(12) ஆகிய சிறுவர்கள் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.

நீண்ட நேரம் ஆகியும் சிறுவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால், அவர்களது பெற்றோர் தேடினர். அப்போது, குளக்கரையில் சிறுவர்களின் உடைகள், காலணிகள் கிடந்தன. பின்பு, நீரில் தேடிய போது சிறுவர்களின் உடல்கள் மிதந்தன.

உப்பில் புதைத்த பெற்றோர்
தண்ணீரில் மூழ்கி இறந்தவர்களை நீண்ட நேரம் உப்பில் புதைத்து வைத்தால், அவர்களுக்கு உயிர் கிடைக்கும் என்ற சிலர் கூறியதை நம்பி சிறுவர்களின் பெற்றோர் இந்த விடயத்தை செய்துள்ளனர். அவர்கள், இதற்காக குவிண்டால் கணக்கில் உப்பு கொண்டு வந்து அதில் சிறுவர்களின் உடல்களைப் புதைத்தனர்.

ஆனால், 6 மணி நேரம் ஆகியும் சிறுவர்களின் உடலில் எந்தவொரு அசைவும் ஏற்படவில்லை. அதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து ஒருவர் பொலிஸாருக்கு தகவல் அளித்தார்.

உடனே, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ஒரு முறை உயிர் பிரிந்தால் திரும்ப வராது, வதந்திகளை நம்பி உங்கள் குழந்தைகளின் இறுதிச்சடங்கை தாமதப்படுத்தாதீர்கள் எனக் கூறினர். பின்னர், இறந்த உடல்களை தகனம் செய்ய பெற்றோர் அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.