;
Athirady Tamil News

ஈழத் தமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த்; திடீர் மரணத்தால் அதிர்ச்சி!

0

கேப்டன் என ரசிகர்களாலும், மக்களாலும் அன்போடு அழைக்கப்பட்ட நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலகுறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகாந்த் உடல் நல குறைவால் தனது 71 ஆவது வயதி இவ் உலகை விட்டு பிரிந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது கடல்தாண்டி கண்டம் தாண்டி வாழும் ஈழ மக்கள் மனங்களிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈழ மக்கள் மனங்களில் இடம்பிடித்த விஜயகாந்த்
நடிகர் விஜயகாந் நடிப்பில் வெளியான பல படங்கள் ஈழமக்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்திருந்ததாலும் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.

அந்தவகையில் ஈழதமிழ் மக்கள் பால் கொண்ட அன்பினால், தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் வைத்திருந்தார் நடிகர் விஜயகாந்த்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டிருந்த நிலையில் நுரையீரல் அழற்சி காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் முதல், அரசியல் தலைவர்கள் , தொண்டர்கள் ரசிகர்கள் என பலரும் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழநாடு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேவேளை அண்மையில் இலங்கையை சேர்ந்த நடிகர் போண்டாமணி திடீர் மரணமடைந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு நடிகர் விஜய்காந்த் மட்டுமே நிதி நுதவி செய்ததாக கூறப்பட்டிருந்தமைக்யும் இங்கு குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.