30 வருஷமா கூட இருக்கன்., என் அப்பாவுக்கு கூட இப்படி அழுததில்ல., கதறி அழுத இலங்கை தமிழர்
யார் யாரோ விட்டு சென்றாலும் ‘தலைவர்’ விஜயகாந்துடன் கடைசிவரை இருக்கவேண்டும் என்று நாங்கள் இருந்தோம் என இலங்கைத் தமிழர் ஒருவர் விஜயகாந்த் வீட்டின் வெளியே கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
முன்னாள் தமிழ் நடிகரும், தேமுதிகவின் நிறுவனரும் தலைவருமான விஜயகாந்த் இன்று (டிசம்பர் 28) தனது 71வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்த செய்தி வெளியானதையடுத்து, விஜயகாந்தால் பயனடைந்த, அவரது கட்சியை சேர்ந்த, ரசிகர்கள் உட்பட அவரை பெரிதும் நேசித்த நூற்றுக்கணக்கானோர், சென்னையில் அவரது வீட்டின் வெளியே குவிந்தனர். அவர்கள் அனைவரும் ‘கேப்டன்’ விஜயகாந்தின் இழப்பை தாங்கமுடியாமல் கதறி அழுதுள்ளனர். அதில் இலங்கை தமிழரும் ஒருவர்.
“தலைவரு எங்களை எல்லாம் விட்டு போய்ட்டாரு, இனிமேல் எங்களுக்குன்னு யார் இருக்கானு தெரியல.,
அவர் கூட கடைசி மட்டும் இருக்கணுமெண்டு இருந்தோம் நாங்க., யார் யாரோலாம் விட்டுட்டு போனாங்க., ஆனால் என் தலைவரு கூட கடைசி மட்டும் இருக்கணுமெண்டு இருந்தோம்., கடைசில எங்களை எல்லாம் விட்டுட்டு போய்ட்டாரு., இந்த ஐயப்ப எங்க தலைவரை பாப்போம்னு தெரியல., இனிமேல் நாங்க எதுக்காக இருக்கனும் என்டே தெரியல..
நான் ஒரு இலங்கைத் தமிழர். அங்கிருந்து இங்க வந்ததிலிருந்து என் தலைவனுடன் கூடவே இருக்கேன். இலங்கையில தான் பிறந்து வளர்ந்த நான், 30 வருஷமாச்சு வந்து நானு, அன்னையில இருந்து இன்டுவரைக்கும் என் தலைவன் கூடவே இருக்கன் நானு.
அவரு சினிமால இருந்து அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம் என் தலைவன் கட்சில சேர்ந்தன்., அதுக்கு அப்புறம் கட்சிலேயே நான் கூட இருக்கன்.
நான் ஈக்காட்டுத்தாங்கல இருக்கன் நானு., 170-வது வட்டத்துல வட்ட அவைத் தலைவரா இருக்கன்., எப்ப வந்தாலும் தலைமைக்கு போய் என் தலைவரை பார்ப்பன். கடைசியக்கூட என் தலைவரை பாக்கப்போனன்.
யார் யார்லாம் இருந்தாங்களோ பதவி எல்லாம் வாங்கிட்டு விட்டுட்டு போய்ட்டாங்க., நாங்க வெறும் தொண்டனாகவே இருந்தோம் என் தலைவனுக்காக, அவருடைய நல்ல உள்ளத்துக்காக, நல்ல அன்புக்காக அவரது கூடவே இருந்தோம்.
ஒரு மனுசனும் வந்து அவரை குறை சொல்லமாட்டான். என் தலைவரை இன்னும் கொஞ்சம் காலம் வச்சிருக்கலாம், சீக்கிரம் கூட்டிட்டி போய்ட்டான் அந்தக் கடவுள்., எங்களால தாங்கிக்கொள்ள முடியல, அவ்வளவு நல்ல மனுசன்.
அவரு நல்ல இருக்கும்போது வெல்ல நிவாரணத்துக்கு அவரு கூடவே நாங்களே போவோம், வேஸ்ட்டிய வடிச்சு கட்டிட்டு எங்க கூட வருவாரு. எல்லாருக்குமே தெரியும் நாங்க சொல்லவேண்டிய அவசியம் இல்ல. அதையெல்லாம் நினைக்கும்போது தான் ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கு. நல்ல மனுசன்.
எங்க அப்பாவுக்கு கூட நன் இப்படி அழுதது இல்லை., அய்யய்யோ என் தலைவன் போய்ட்டானே, எங்களையெல்லாம் விட்டுட்டு என் தலைவன் போய்ட்டானப்பா” என கதறி கதறி அழுதார் எந்த இலங்கைத் தமிழர்.