பதில் காவல்துறை மா அதிபருக்கெதிராக பேராயர் மல்கம் ரஞ்சித் மனு தாக்கல்
தேஷ்பந்து தென்னகோன் பதில் காவல்துறை மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கவும் உத்தரவிடவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் 4 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நேற்று(29) பிற்பகல் வேலையிலேயே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமை மனுக்கள்
கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், சத்தியம் மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி அமில எமடகொட, மற்றும் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார ஆகியோர் இணைந்தே இதனை மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறை மா அதிபர்
இந்நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் பதில் காவல்துறை மா அதிபராக தேஷ்பந்து தென்னகோன், நியமிக்கப்பட்டதையடுத்து நேற்று (29) கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.
காவல்துறை மா அதிபராக பணியாற்றிய சி.டி விக்ரமரத்ன தனது பதவியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், பதில் காவல்துறை மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை,தேஷபந்து தென்னகோன், மேல் மாகண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய நிலையிலேயே இந்த புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.