இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றில் வழக்கு பதிவு செய்த நாடு
இஸ்ரேல் மீது தென் ஆபிரிக்கா சர்வதேச நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த மூன்று மாதங்களாக காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், 20000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
இதன் காரணமாகவே, தென் ஆபிரிக்கா இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலை தன்மை
குறித்த முறைப்பாட்டில், “காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலை தன்மை கொண்டவை, ஏனெனில் அவை பலஸ்தீனிய தேசிய, இன மற்றும் இனக்குழுவின் கணிசமான பகுதியை அழிக்கும் நோக்கம் கொண்டவை” என தென் ஆபிரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், காசாவில் பலஸ்தீனியர்களைக் கொல்வது, அவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக கடுமையாக தீங்கு விளைவிப்பது மற்றும் அவர்களின் உடல் ரீதியான அழிவைக் கொண்டு வருவதற்காக கணக்கிடப்பட்ட வாழ்க்கை நிலைமைகளை அவர்கள் மீது சுமத்துவது ஆகியவை கேள்விக்குரிய செயல்களில் அடங்கும்’ எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் கொள்கைகள்
அத்தோடு, ஐ.நா.வின் உறுப்பினர்களான தென் ஆபிரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டவை ஆகும்.
அதேவேளை, பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் கொள்கைகள் நிறவெறிக்கு சமம் என பல மனித உரிமை அமைப்புகள் சாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.