வெளிநாடொன்றில் சிக்கித்தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள்
ஜோர்தானின் சஹாப் பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றுக்கு தொழில் நிமித்தம் சென்ற 350 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இவர்களை இலங்கைக்கு அழைத்துவர தேவையான தலையீடுகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான விசாரணைக்கு பதிலளித்த பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், நாட்டின் தூதரகம் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்களின் தலையீடு
மேலும், நாட்டின் தொழிலாளர் மற்றும் நீதி அமைச்சுக்களின் தலையீடு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் 350க்கும் மேற்பட்டோர் வேலையின்றி நிர்க்கதியாகி உள்ளதாகவும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.