மீண்டும் தலைதூக்கும் தட்டம்மை நோய் : சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட்ட தட்டம்மை மீண்டும் தலைதூக்கியுள்ளதாகவும்,சில மாதங்களில் 700 நோயாளிகள் பதிவாகியிருந்த நிலையில், நாட்டில் தொற்றுநோய் நிலைமையை மீண்டும் உருவாக்கி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் குறித்து தொற்றுநோயியல் துறையின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில்,
“மேலும், மீண்டும் தலைதூக்கிய தொழுநோய், மலேரியா, டெங்கு, எய்ட்ஸ் போன்ற நோய்களும் பெருமளவில் அதிகரித்து வருவதால், தொற்றுநோயியல் துறையினர் பொறுப்பை மக்கள் மீது போட்டுக் கைகழுவ முடியாது.
சுகாதார சேவையின் வீழ்ச்சி
அத்துடன்,காலாவதியான பழமைவாத முறைகளை கடைப்பிடிப்பதாலும், சுகாதார சேவைக்காக பெறப்படும் அதிகபட்ச உதவித்தொகையை பயன்படுத்த தவறியதாலும், மக்கள் தொற்றுநோயியல் துறையிலிருந்து பெறக்கூடிய சேவைகளைப் பெறவில்லை.
இதன்படி, முழு சுகாதார சேவையின் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு, மேம்பட்ட மற்றும் நவீன நிர்வாகக் கண்ணோட்டத்துடன் தீர்வுகளை வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.