வைரஸ் தொற்று பரவும் நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜேர்மன் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
கோவிடும் ப்ளூ காய்ச்சலும் அதிகரித்துவரும் நேரத்தில், ஜேர்மன் மருத்துவர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலைநிறுத்ததில் ஈடுப்பட்டுள்ளனர்.
செலவுகள் அதிகம், வரவு குறைவு, வேலைப்பழு அதிகம்
மருத்துவர்கள், தங்களுக்கு வேலைப்பழு அதிகரித்துவருவதாகவும், செலவுகள் அதிகமாகவும், வருவாயோ குறைவாகவோ இருப்பதாகவும் கூறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
கோரிக்கைகளை நிராகரித்த சுகாதாரத்துறை அமைச்சர்
ஆனால், எதற்காக இந்த வேலைநிறுத்தம் என்பது எனக்குப் புரியவில்லை என்று கூறியுள்ளார் ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbach.
மக்களிடையே பெருமளவில் நோய்த்தொற்று காணப்படுகிறது, மேலும் மேலும் பணம் வேண்டும் என மருத்துவர்கள் கேட்கிறார்கள். இந்த வேலைநிறுத்தத்ததால் எந்த பயனும் இல்லை என்கிறார் அமைச்சர்.
அவரது கருத்தை நோயாளிகள் ஆதரவு அமைப்புகளும் ஆதரிக்கின்றன. எந்த வேலையிலிருப்பவர்கள் வேண்டுமானாலும் வேலைநிறுத்தம் செய்யலாம். ஆனால், இந்த மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தவறான மக்களை பாதிக்கிறது.
குறிப்பாக கிராமப்பகுதிகளில், வயதானவர்கள் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்திலிருப்போர், இந்த வேலைநிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறும் Deutsche Stiftung Patientenschutz என்னும் நோயாளிகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பின் தலைவரான Eugen Brysch, இந்த மருத்துவர்கள் அமைச்சர்களிடமும் காப்பீட்டு நிறுவனங்களிடமும் தங்கள் பிரச்சினையைக் கொண்டு செல்லவேண்டும். அதைவிட்டுவிட்டு இப்படி வேலைநிறுத்தம் செய்வதால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார்.