இனி இந்தியாவிலும் டெஸ்லா; அதுவும் எங்கு தெரியுமா – முக்கிய அறிவிப்பு!
![](https://www.athirady.com/wp-content/uploads/2023/12/Screenshot-2023-12-30-144420-750x430.jpg)
டெஸ்லாவின் புதிய நிறுவனம் இந்தியாவில் தொடங்க உள்ளது.
டெஸ்லா
டாடா, ஹூண்டாய், மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துவருகின்றன. இந்நிலையில், டெஸ்லா நிறுவனம் தற்போது இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
தனது வாகனங்களை அதிகப்படியான இறக்குமதி வரி காரணத்தினால் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யமுடியவில்லை. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் வைப்ரண்ட் குஜராத் உச்சிமாநாட்டில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் கலந்துக்கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் தொழிற்சாலை
தொடர்ந்து, குஜராத்தின் சனத் நகரில் டெஸ்லாவின் நிறுவனம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. வாகனங்களை ஏற்றுமதி செய்வதற்கு கண்ட்லா மற்றும் முந்த்ரா துறைமுகங்கள் அருகில் இருப்பது காரணமாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், டெஸ்லா சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மத்திய அரசு இந்தியாவில் தொழிற்சாலையைத் துவங்கினால் முதல் 2 வருடத்திற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 15 சதவீதம் வரி தள்ளுபடி அளிக்கப்படும் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.