கொழும்பில் பரபரப்பு சம்பவம்: சிறுவர்கள் உட்பட 4 பேர் சடலமாக மீட்பு!
கொழும்பு – மாலபே – காஹன்தொட்ட பகுதியில் சிறுவர்கள் உட்பட நால்வர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன்கள் மற்றும் மகள் ஆகியோரே சடலங்களாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
35 வயதான தாய், 09 மற்றும் 10 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பெண்ணின் கணவர் சில தினங்களுக்கு முன்பு நஞ்சு அருந்தி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மேலும், உயிரிழந்த கணவரின் 7 நாள் கரும காரியம் நேற்றிரவு நடாத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கணவரின் உயிரிழப்பினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மனைவி பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து, தானும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைளை ஆரம்பித்துள்ளனர்.