அரியணையை என் மகனுக்கு விடுகிறேன்! 52 ஆண்டுகளுக்கு பின் பொறுப்பை துறந்த ராணி
டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அரியணையில் இருந்து விலகும் ராணி
ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ராணியாக இரண்டாம் மார்கிரேத் (Margrethe) 1972ஆம் ஆண்டு அரியணை ஏறினார்.
இந்த நிலையில் புத்தாண்டு உரையில் பேசிய மார்கிரேத், ராணி எனும் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
83 வயதாகும் ராணி மார்கிரேத், கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு முதுகு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
மகனிடம் விட்டுவிடுகிறேன்
இதுகுறித்து மார்கிரேத் கூறுகையில், ‘அறுவை சிகிச்சை இயற்கையாகவே எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வழி வகுத்தது – அடுத்த தலைமுறைக்கு பொறுப்பை விட்டுச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. இப்போதுதான் சரியான நேரம் என்று முடிவு செய்துவிட்டேன்.
14 ஜனவரி 2024 அன்று – என் அன்பான தந்தைக்குப் பிறகு, நான் 52 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் டென்மார்க்கின் ராணியாக பதவி விலகுவேன். நான் அரியணையை என் மகன் பட்டத்து இளவரசர் Frederik-யிடம் விட்டு விடுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கில் முறையான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் மற்றும் அதன் அரசாங்கத்திடம் உள்ளது.