;
Athirady Tamil News

காசா மீதான போர் பல மாதங்கள் நீடிக்கும் : இஸ்ரேல் பிரதமரின் அறிவிப்பால் பரபரப்பு

0

காசாவில் ஹமாசுக்கு எதிராக நடக்கின்ற போர் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும், என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காசா மீதான போரை உடனடியாக நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு ஐ.நா. மற்றும் பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே அவர் இத்தகைய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சிக்கலான சண்டையில் ஈடுபடுகின்றது
காசாவில் இன்னும் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இஸ்ரேலியர்களையும் மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கான முயற்சியில் இஸ்ரேல் இராணுவம் ஒரு சிக்கலான சண்டையில் ஈடுபடுகின்றது, அதன் வெற்றியை நோக்கிய பயணத்தில் அவர்களின் இலக்குகளை அடைய இன்னும் நேரம் தேவை.

காசாவில் இருந்து ஹமாஸ் முற்றாக அகற்றப்பட்டு பணயக்கைதிகள் திரும்பும் வரை போர் பல மாதங்களானாலும் தொடரும்.

இஸ்ரேல் தீவிர தாக்குதல்
காசா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று நாங்கள் உத்தரவாதம் அளிப்போம், நாங்கள் படிப்படியாக ஹமாசின் திறன்களை அழித்து வருகிறோம், அந்த அமைப்பின் தலைவர்களையும் ஒழிப்போம்.” என்றார்.

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது, ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா முனைப் பகுதி முழுவதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட 21ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர், போரால் காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.