நியூசிலாந்தில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ அமைச்சரவை அனுமதி
நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை நேற்று (01) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெளிவகார அமைச்சர் அலி சப்ரி யோசனை சமர்ப்பித்திருந்த நிலையில் குறித்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இராஜதந்திரத் தொடர்பு
நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திரத் தொடர்புகளை மேலும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கத்தில் இது நிறுவப்பட உள்ளது.
இதேவேளை நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவுவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, வெளிவகார அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.