தாய்வான் சீனாவுடன் இணைக்கப்படும் : ஜி ஜின்பிங் உறுதி
தாய்வான் சீனாவுடன் இணைக்கப்படும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
2024 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங், தனது நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஜி ஜின்பிங் ஆற்றிய புத்தாண்டு உரையில், “தாய்வான் தீபகற்பத்தின் இரு பக்கமும் உள்ள மக்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்” என அறிவித்திருந்தார்.
ராணுவ நடவடிக்கை
ஆனால், இவ்வருடம் திட்டவட்டமாக இணைப்பை குறித்து அவர் பேசியிருப்பது புதிய சச்சரவிற்கு வழிவகுக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ராணுவ நடவடிக்கை மூலம் தாய்வானை தன் நாட்டுடன் இணைக்க சீனா முயலுமா என்பதும் அவ்வாறு நடந்தால் அமெரிக்கா தலையிடுமா என்பதும் வரும் மாதங்களில் தெரிய வரும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.