;
Athirady Tamil News

சொத்துவரி பெயர் மாற்ற 20 ஆயிரமா..? அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!

0

சொத்துவரியில் பெயர் மாற்ற 20 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதை எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார்.

20 ஆயிரம்
இது குறித்து அதிமுகவின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூகவலைதளபதிவில், விடியா திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு,

அரசின் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு என்று தமிழக மக்கள் வாட்டி வதைத்த நிலையில் தற்போது சொத்து வரி பெயர் மாற்றத்திற்காண கட்டணத்தை 20 ஆயிரமாக உயர்த்த இந்த முடிவு செய்துள்ளதாக வந்த செய்தி மிகவும் கண்டனத்திற்குரியது.

கைவிட வேண்டும்
நல்ல அரசு என்பது மக்களின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வதாக, மக்களுக்கு கிடைக்க வேண்டிய சான்றிதழ்கள்,பத்திரங்கள், பெயர் மாற்றங்கள் போன்ற அரசின் நடைமுறைகள் குறைந்த கட்டணத்தில், எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்,

எனவே சொத்துவரி பெயர் மாற்றம் செய்வதற்காண கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனடியாக கைவிட இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.