ஈரானில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 70 பேர் பலி
ஈரானில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 70 பேர் பலியாகியுள்ளதோடு, 170 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் பலியான காசிம் சுலைமானின் நினைவு நாள் நேற்று (03) அந்த நாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.
அவரது கல்லறை அருகே நடைபெற்ற அனுசரிப்பு நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலிலேயே 70 பேர் உயிரிழந்ததாக ஈரான் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயங்கரவாத தாக்குதல்
இவ்விடயம் குறித்து ஈரான் அதிகாரி பாபக் யெக்டபாரஸ்ட் குறிப்பிடுகையில்,
“ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள கெர்மன் மாகாணத்தில் இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது, அத்துடன் இதுவொரு பயங்கரவாத தாக்குதல் ஆகும்.” என்றார்.