;
Athirady Tamil News

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென அச்சம்

0

ஜப்பானில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வஜிமா நகரில் 39 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுசு நகரை சேர்ந்த 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் 5 நகரங்களை சேர்ந்த தரப்பினரும் இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேதமடைந்த கட்டடங்கள்
சேதமடைந்த கட்டடங்களில் மேலும் பலர் சிக்கியிருக்க கூடுமென மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு தினத்தில் ஜப்பானில் பதிவான நிலநடுக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறாக காயமடைந்தோரில் சுமார் 25 பேர் கவவலைக்கிடைமான நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள்
இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 3 இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து உணவு மற்றும் நீர் உள்ளிட்ட அத்தியவாசிய தேவைகளின்றி தவிப்பதாக சுட்டடக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
இதேவேளை, கடந்த முதலாம் திகதி பதிவானதை விட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானில் மீண்டும் ஏற்படக்கூடுமென அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.