;
Athirady Tamil News

நிலநடுக்கத்தில் மொத்தமாக புதைந்துபோன பாடசாலை கைப்பந்து அணி: விசாரணையை துவக்கிய ஐரோப்பிய நாடு

0

துருக்கி நிலநடுக்கத்தின் போது 72 பேர்கள் மொத்தமாக கொல்லப்பட்ட ஹொட்டல் இடிந்து விழுந்த விவகாரத்தில் முதல் குற்றவியல் விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம்
தென்கிழக்கு நகரமான அதியமானில் உள்ள ஹொட்டலில் துருக்கிய கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சைப்ரஸில் இருந்து பாடசாலை கைப்பந்து அணி ஒன்று தங்கியிருந்தது.

இவர்களுடன் சுற்றுலா வழிகாட்டிகள் குழு ஒன்றும் அந்த ஹொட்டலில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையிலேயே துருக்கி மற்றும் சிரியாவை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் பலி எண்ணிக்கை 50,000 கடந்தது. சுமார் 160,000 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன அல்லது மோசமாக சேதமடைந்தன, 1.5 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.

சம்பவம் நடந்து சில வாரங்களுக்கு பின்னர், கட்டிடங்கள் இடிந்து விழுந்த விவகாரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் விசாரணை வட்டத்தில் இருப்பதாகவும் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் சொத்து உரிமையாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 200 பேர் கைது செய்யப்பட்டதாகவும் துருக்கி அரசாங்கம் அறிவித்தது.

22 ஆண்டுகள் வரையில் தண்டனை
7 மாடிகள் கொண்ட Isias Grand ஹொட்டலில் தங்கியிருந்த பாடசாலை கைப்பந்து அணியினர், அவர்களது ஆசிரியர்கள் மற்றும் சிலரது பெற்றோர்கள் உட்பட 39 பேர்கள் அந்த ஹொட்ட.ல் இடிந்து விழுந்ததில் சிக்கி கொல்லப்பட்டனர்.

இவர்களுடன் 40 சுற்றுலா வழிகாட்டிகளும் கொல்லப்பட்டனர். நான்கு பெற்றோர்கள் மட்டும் இந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர். துருக்கி அரசாங்கம் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என்று தப்பியவர்கள் புகார் குற்றஞ்சாட்டினர்.

இந்த விவகாரத்தில் தற்போது 11 பேர்கள் மீது விசாரணை துவங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. 11 பேர்கள் மீதான வழக்குகள் நிரூபிக்கப்பட்டால் 2 முதல் 22 ஆண்டுகள் வரையில் தண்டனை விதிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.