;
Athirady Tamil News

யாழிற்கு வரும் ஜனாதிபதி ரணில்; பல தரப்புக்களை சந்திக்க திட்டம்!

0

வடமாகாணத்திற்கு நான்கு நாள் பயணமாக இன்று யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

ஜனாதிபதி நிகழ்ச்சி நிரல்
அதன்படி ஜனாதிபதி, இன்று மாலை 3 மணி முதல் 5.30 வரை யாழ்.மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார்.

மாலை 7 மணி முதல் 9.30 வரை தனியார் விடுதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கின்றார்.

5ஆம் திகதி காலையில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிற்கான விசேட அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலும் மாலை 2 மணி தொடக்கம் 3 மணிவரையில் பூநகரிப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நகரமயமாக்கல் தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மாலை 6 மணி முதல் 8 மணி வரை யாழ்ப்பாணத்தில உள்ள தனியார் விடுதியில் இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

6 ஆம் திகதி காலை 9 மணிமுதல் 10 மணிவரையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கிளிநொச்சி அறிவியல் நகர் பீட பீடாதிபதி உள்ளிட்ட விரிவுரையாளர்களுடனான சந்திப்பை தொடர்ந்து 10 மணிமுதல் 11.30 வரையில் சர்வ மதப் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்கள் ஆகியவற்றுடன் போதனா வைத்தியசாலையின் நலன்புரி சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிமுதல் 5 மணிவரை மாவட்டச் செயலகத்தில் நிபுணர்களுடனான சந்திப்பும் நடைபெறவுள்ளது. மேலும் 7 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் பனை தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளதுடன் அதனை முடித்து கொண்டு ஐனாதிபதி கொழும்பு செல்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.