;
Athirady Tamil News

அமெரிக்கா: பெண் நீதிபதி மீது தாக்குதல்

0

அமெரிக்காவின் நவாடா மாகாணம், க்ளாா்க் மாவட்ட நீதிமன்றத்தில் பெண் நீதிபதி மேரி கே ஹோல்தஸ் மீது இளைஞா் பாய்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டியோப்ரா ரெடன் என்ற அந்த 30 வயது நபா், அடிதடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபேற்றது. அதில் ரெடனைக் குற்றவாளியாக அறிவித்த நீதிபதி ஹோல்தஸ், அவரைக் கைது செய்து சிறையிலடைக்க உத்தரவிட்டாா். இதைக் கேட்ட ரெடன் திடீரென நீதிபதி மீது பாய்ந்து தாக்கினாா். உடனடியாக அவரை அங்கிருந்தவா்கள் மடக்கிப் பிடித்தனா்.

நீதிபதி ஹோல்தஸுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ரெடன் மீது கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.