;
Athirady Tamil News

இந்தியாவிற்கு திக்திக் நிமிடங்கள்; இறுதி இலக்கை நெருங்கும் ஆதித்யா எல்-1 – இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு

0

ஆதித்யா எல்-1 தனது இறுதி இலக்கை நெருங்கிக் கொண்டு இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஆதித்யா எல்1
ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் ஆதித்யா எல்1 வருகிற 6 ஆம் திகதி மிக முக்கியமான செயலை மேற்கொள்ளவிருகிறது.

இறுதி கட்டத்தை நோக்கி நகரும் ஆதித்யா எல்- 1
அதாவது விண்கலத்தில் சுற்றுப்பாதை குறைப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுப்பாதை சூழ்ச்சி தொடர்பான செயலை இஸ்ரோ இதுவரையில் செய்ததில்லை.

இந்தியாவின் முதன்மையான விண்வெளி நிறுவனம், எல்1 புள்ளியில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த முயற்சிப்பது இதுவே முதல் முறையாகும். அந்த புள்ளிக்கு சென்றால் மட்டுமே ஆதித்யா சூரியனை தடையின்றி பார்க்க முடியும்.

பூமி சூரியனைச் சுற்றி வரும்போது, ​​L1 புள்ளியும் சேர்ந்து நகரும். எனவே, ஒளிவட்ட சுற்றுப்பாதையும் பூமியுடன் இணைந்து நகரும் என இந்திய வானியற்பியல் கழகத்தின் இயக்குனர் அன்னபூர்ணி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

6 ஆம் திகதி இஸ்ரோ முன்னெடுக்கவுள்ள முயற்சியானது மிகமுக்கியமான செயலாகும். இது விண்கலத்தின் வேகம் மற்றும் பாதையை மாற்றுவதற்காக உந்துதல்களை இயக்கச் செய்கிறது.

இதை தவறவிட்டால் அடுத்தடுத்து பல திருத்தங்களை முன்னெடுக்க நேரிடும் என ஆதித்யா எல்1 மிஷனின் விண்வெளி வானிலை மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரான திபியேந்து நந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் ஆதித்யா விண்வெளியில் 124 நாட்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. ASPEX இன் PAPA மற்றும் ஒரு கூறு, சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் உட்பட நான்கு கருவிகள், விண்கலத்தின் பயணக் கட்டத்தில் இயக்கப்பட்டு நன்றாக செயற்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.