கடன் வலையில் சிக்கிய அமெரிக்கா: முகம் கொடுக்க போகும் சவால்கள்
அமெரிக்க அரசாங்கத்தின் மொத்த தேசிய கடன் 34 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த அறிக்கையை அந்நாட்டு நிதித் துறை வெளியிட்டுள்ளது.
அத்தோடு, இந்த கடன்நிலை, நாட்டின் இருப்புநிலையை மேம்படுத்துவதற்கு, எதிர்வரும் ஆண்டுகளில் அரசாங்கம் அரசியல் மற்றும் பொருளாதார முன்னணியில் பல சவால்களை எதிர்கொள்ளவிருப்பதை எடுத்துக் காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடன் அதிகரிப்பு
மேலும், அந்த அறிக்கையின் படி, ஆண்டு வருவாய் இல்லாமல், அரசாங்கத்தின் சில பகுதி பணிகள் ஸ்தம்பிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் தேசிய கடன் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக அதிகரித்துள்ளதை அந்த அறிக்கை காட்டுவதாக கூறப்படுகிறது.
கோவிட் தொற்று
அத்துடன், 2020ஆம் ஆண்டு ஜனவரியில், மொத்த கூட்டாட்சிக் கடன் 2028-29 நிதியாண்டில் $34 டிரில்லியனை எட்டும் என்று Congressional Budget Office மதிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2020-ல் தொடங்கிய கோவிட் பெருந்தொற்று நோய் காரணமாக, கடன் எதிர்பார்த்ததை விட பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த அளவை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 121 சதவீதம் கடன் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.