நியூசிலாந்து நாடாளுமன்றத்தையே அதிர வைத்த பழங்குடி பெண்
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மௌரி பழங்குடி பெண் எம்பி மைபி கிளாக், தங்களின் பாரம்பரிய வெற்றி முழக்கதை முழங்கிவிட்டு தனது உரையை ஆரம்பித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தை அங்கிருந்து எம்பிக்கள் மகிழ்ச்சியுடனும், ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டு இருந்துள்ளனர்.
நியூசிலாந்து நாட்டின் 170 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஒக்டோபரில் 21 வயது இளம் பெண் எம்பி தேரிவு செய்யப்பட்டுள்ளார்.
காணொளி
அத்துடன், மைபி கிளார்க் என்ற அந்த பெண் எம்பி தான் நியூசிலாந்து நாட்டிலேயே 21 வயதில் எம்பியானவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் மௌரி பழங்குடி பெண் எம்பியான மைபி கிளார்க் நாடாளுமன்றத்தில் முழக்கமிட்ட காணொளி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
New Zealand natives’ speech in parliament pic.twitter.com/OkmYNm58Ke
— Enez Özen | Enezator (@Enezator) January 4, 2024
பழங்குடி பெண்
அதேவேளை, நியூசிலாந்தை பொறுத்தவரை ஹக்கா நடனம், நியூசிலாந்து மௌரி பழங்குடியினரின் ஆதி பழக்கங்களில் ஒன்று, போர்,வெற்றி,ஒற்றுமை,இன குழுவின் பெருமை என எல்லாவற்றையும் சொல்ல பயன்படுத்தபடும் முறையாக கருதப்படுகிறது.
இந்தநிலையில், நியூசிலாந்து நாட்டின் மௌரி பழங்குடி பெண் எம்பியான மைபி கிளார்க் நாடாளுமன்றத்தில் முழக்கமிட்ட காணொளி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.