அரச ஊழியர்களுக்கு இம்மாதம் முதல் 5,000 ரூபா: அரசாங்கம் தீர்மானம்
அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த வருட தைப்பொங்கல் பண்டிகையின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவு நிதி நிவாரணம் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதுடன் அனைத்து மக்களுக்கும் நிவாரணங்களை வழங்குவதற்கு தாம் பாடுபடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே, அனைத்து மக்களும் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதை தாம் நன்கு அறிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.