ஆண்களுக்கும் தனி பேருந்து? மகளிர் இலவச திட்டத்தால் திணறல் – முக்கிய ஆலோசணை
ஆண்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுவது குறித்த ஆலோசணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எண்ணிக்கை அதிகரிப்பு
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் அரசு மகளிருக்குப் பேருந்து பயணம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து நடைமுறைப் படுத்தி வருகிறது.
இதன் காரணமாக அங்கு பேருந்துகளில் செல்லும் பெண்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 20% வரை அதிகரித்துள்ளது. இதனால், பேருந்துகளில் பயணிக்கும் ஆண்கள் தங்களுக்கு இருக்கைகள் கிடைப்பதில்லை. முதியவர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் இந்த புகாரை முன்வைத்துள்ளனர்.
சிறப்பு பேருந்து?
இந்த பிரச்சினையைச் சரி செய்ய பல்வேறு மாற்று வழிகள் குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். ஆண்களுக்குச் சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசித்து வருவது உண்மை தான். ஆனால் ஏற்கனவே எங்களிடம் பஸ் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் உடனடியாக
இதுபோல ஆண்களுக்குச் சிறப்புப் பேருந்துகளை எங்களால் இயக்க முடியாது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மற்ற பேருந்துகளிலும் கூட ஆண்களுக்கான தனி இருக்கைகள் மற்றும் குறிப்பாக முதியோருக்குத் தனியாக இருக்கைகள் ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகளிர் இலவச பயணத்தைப் பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.