;
Athirady Tamil News

சூரியனையும் சொந்தமாக்கிய இந்தியா! இறுதி இலக்கை அடைந்த ஆதித்யா எல்-1

0

ஆதித்யா எல்-1 விண்கலமானது மாலை 4.11 மணியளவில் தனது இறுதி இலக்கை அடைந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஆதித்யா எல்-1
ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் ஆதித்யா எல்1 நேற்று மாலை 4.11 மணியளவில் தனது இறுதி இலக்கை சென்றடைந்துள்ளது.

இலக்கை அடைந்த ஆதித்யா எல்1
பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள முதல் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்துள்ளது.

பூமி மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைகள் பூஜ்ஜியம். எனவே எந்த ஒரு பொருளையும் அந்த இடத்தில் எந்த விசையும் இல்லாமல் நிலையாக வைத்திருக்க முடியும்.

எனவே ஆதித்யா எல்1 அங்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அங்கும் சந்திரன் மற்றும் பிற கோள்களின் ஈர்ப்பு விசைகள் குறைந்த அளவில் இருக்கும்.

அதனால்தான் இஸ்ரோ ஆதித்யா எல்1 விண்கலத்தை அந்த லக்ராஞ்சியன் புள்ளியைச் சுற்றி பூஜ்ஜியம் ஈர்ப்பு விசையுள்ள சுற்றுப்பாதையில் செலுத்தப் போகிறது.

ஆதித்யா எல்1 பூஜ்ஜிய சுற்றுப்பாதையை அடைந்தவுடன், அது தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு செயற்படும்.

இது சூரியனின் மேற்பரப்புக்கு அருகில் செல்லாது. ஆனால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தில் நூறில் ஒரு பங்கு வரை சென்று ஆய்வு செய்யும்.

ஆதித்யா எல்1 சூரியனின் மேற்பரப்பில் உள்ள கரோனாவை கண்காணிக்கும். இதற்காக இதில் 07 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதில் 4 கருவிகள் சூரியனை ஆராய்ச்சி செய்யும். மற்ற 3 கருவிகள் லக்ராஞ்சியன் புள்ளி 1க்கு அருகில் உள்ள நிலைமைகளை ஆய்வு செய்து, தகவல்களை இஸ்ரோவுக்கு அனுப்பும்.

இந்த பயணத்திற்குப் பிறகு, வீனஸ், செவ்வாய், வியாழன், நெப்டியூன் மற்றும் புளூட்டோ போன்ற கிரகங்களுக்கும் விண்கலங்களை இஸ்ரோ அனுப்பவுள்ளதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியடைந்துள்ளதாக தனது x தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்கு ஆய்வுகளை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.