;
Athirady Tamil News

யாழ் மாவட்டஐக்கிய தேசிய கட்சி பிரதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடல்

0

யாழ் மாவட்டஐக்கிய தேசிய கட்சி பிரதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்விடுதியில் இடம் பெற்றது

யாழ்ப்பாணத்திற்கு நான்கு நாள் விஜயமாக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் அழைப்பில ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்

குறித்த கலந்துரையாடல் யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது

குறித்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததோடு

ஜனாதிபதிக்கு நினைவு பரிசில்களையும், கோரிக்கை கடிதங்களையும் வழங்கி வைத்தனர்

குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்பொழுது நம் அனைவருக்கும் உள்ள மிகப்பெரிய சவால் பொருளாதார மேம்பாட்டினை ஏற்படுத்துவது அத்தோடு வடபகுதியில் உள்ள வளங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்

குறிப்பாக வடக்கில் நான் வருகை தரும் போதெல்லாம் பிரச்சனை என்ன என கேட்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, அரசியல் தீர்வு என ஒரு சில பிரச்சனைகளுடன் மாத்திரம் என்னிடம்
அணுகுவார்கள் அதனை விடுத்து நாம் முன்னோக்கி செல்வதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி தான் நான் ஆராய்கின்றேன்,

குறிப்பாக விவசாயத் துறையினை நவீன மயப்படுத்தி நவீன முறையிலான விவசாய முறைகளை விரிவு படுத்துவதன் மூலம் தன்னிறைவு பொருளாதாரம் ஒன்றினை உருவாக்குவதே எமது நோக்கம் அத்தோடு
வெளிநாடுகளில் எவ்வாறு மின்சாரத்தினை இயற்கை வளத்தினை பயன்படுத்தி உற்பத்தி செய்கின்றார்கள் அல்லது விவசாய உற்பத்தினை எவ்வாறு நவீன முறையில் உற்பத்தி செய்கின்றார்கள் போன்றவற்றை நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். எனவே எதிர் வரும் காலங்களில் நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பொருளாதாரத்தை மேம்படுத்தல் அவசியமான ஒன்றாகும் .

அதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.