சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் : ஒன்பதாவது முறையாக தென்மாகாணம் சாதனை
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தென் மாகாணம் தொடர்ச்சியாக ஒன்பதாவது தடவையாக நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக முதலாமிடம்
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்கு தென் மாகாணத்திலுள்ள பாடசாலைகளிலிருந்து முதன்முறையாகத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 41,446 ஆகும். இதில் 32,165 பேர் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி வீதத்தின் படி சப்ரகமுவ மாகாணம் 75.18 வீதத்துடன் இரண்டாமிடத்தையும் மேல் மாகாணம் 74.96 வீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
மேலும், 2017 முதல் 2022 வரை தொடர்ச்சியாக ஒன்பது வருடங்களாக தென் மாகாணம் பெறுபேறுகளின் அடிப்படையில் முதலாம் இடத்தில் உள்ளது.