;
Athirady Tamil News

1008 பொங்கல் பானைகள், 1500 பரதநாட்டிய கலைஞர்கள்; கிழக்கில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா

0

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகள், 1500 பரதநாட்டிய கலைஞர்கள், 500 கோலங்களுடன் பொங்கல் விழா இன்று (08) திருகோணமலையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து
பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் நடத்தியிருந்தார்.

அத்துடன், இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்ட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தியமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மற்றுமொரு சிறப்பம்சமாக பொங்கலை வரவேற்கும் விதத்தில் “பொங்கல் திருவிழா” தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.