;
Athirady Tamil News

பங்களாதேஷில் பெரும் தீ விபத்து; 7 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு

0

தென்கிழக்கு பங்களாதேஷில் உள்ள ரோகிங்கியா அகதிகள் முகாம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் தீயில் கருகியது மாத்திரமல்லாமல் 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் தீயில் கருகின.

இதனால், 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன் தினம் (07) ஏற்பட்ட இந்த தீ விபத்தின் போதே மேற்குறித்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

இங்கு பரவிய தீயினை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, தீயணைப்புப் படையினர் மற்றும் ரோகிங்கியா தன்னார்வலர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில் 3 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

காரணம் என்னவென தெரியவில்லை
இந்த தீ விபத்தில் வீடுகள் மாத்திரமன்றி, கல்வி மையங்கள், மசூதிகள் மற்றும் சுகாதார நல மையங்கள் உள்ளிட்ட பல்வேறு மையங்களும் பாதிக்கப்பட்டு, சேதமடைந்து உள்ளதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி அகதிகளுக்கான அரசு துணை பொறுப்பு அதிகாரி முகமது ஷாம்ஷத் தவுசா கூறும்போது,

“அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்திருக்கிறோம்,பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

மேலும், தீ விபத்திற்கான காரணம் என்னவென தெரியவில்லை எனவும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிவேலை
கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதமும் இதேபோல் பெரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது, இதன்போதும் முகாம்களில் இருந்த 15 அகதிகள் உயிரிழந்துள்ளதுடன், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

இதேபோல் கடந்த ஆண்டும் (2023) தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இதிலும் 12 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தது மாத்திரமன்றி, 2,800 கூடாரங்கள் மற்றும் மருத்துவமனைகள் மற்றும் கல்வி மையங்கள் என 90 மையங்களும் தீயில் அழிந்துள்ளன.

இதனால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிவேலையாக இருக்கலாம் எனவும், இதுபற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.