;
Athirady Tamil News

உக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணை மழை: 5போ் பலி

0

முகப்பு உலகம்Google Newskooஉக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணை மழை: 5போ் பலிBy DIN | Published On : 09th January 2024 04:30 AM | Last Updated : 09th January 2024 04:30 AM | அ+அ அ- |
க்ரீவ்யிரீ நகரில் ரஷியா திங்கள்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்திய பகுதியில் பரவிய நெருப்பை அணைக்கும் தீயணைப்பு வீரா்.க்ரீவ்யிரீ நகரில் ரஷியா திங்கள்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்திய பகுதியில் பரவிய நெருப்பை அணைக்கும் தீயணைப்பு வீரா்.
கீவ்: உக்ரைன் முழுவதும் ரஷியா திங்கள்கிழமை அதிகாலை மீண்டும் தீவிர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 5 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

திங்கள்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் நகரப் பகுதிகள் குறிவைக்கப்பட்டன. இதில் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவையும் சேதமடைந்தன.

நீப்ரோபெட்ரோவ்ஸ் பிராந்தியத்தின் க்ரீவ்யிரீ நகரில் நடத்தப்பட்ட ஏவுகணை வீச்சில் ஒரு பெண் உயிரிழந்தாா்; 24 போ் காயமடைந்தனா்.

கெல்னிட்ஸ்கி பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் மேலும் 2 போ் உயிரிழந்தனா். கொ்சான் பகுதியில் ரஷியா நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 போ் கொல்லப்பட்டனா் என்று அதிகாரிகள் கூறினா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. அந்தப் பிராந்தியங்களில் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும், இழந்த பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்க உக்ரைனும் நடத்தி வரும் போா் அண்மைக் காலத்தில் மந்தமாகிவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், உக்ரைன் நகரங்களில் அதுாத அதிக தீவிரத்துடன் ரஷியா கடந்த மாத இறுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக, ரஷியா மீது ட்ரோன்களை ஏவிய உக்ரைன், ரஷிய எல்லை நகரான பெல்கராட் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 10 போ் கொல்லப்பட்டனா்.

அதற்கு எதிா்வினையாக உக்ரைன் மீது ரஷியா தொடா்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.