கடல் வழியாக புலம்பெயர முயன்ற 6 ஆயிரம் பேர் பலி
கடந்த ஆண்டு மட்டும் ஸ்பெயினுக்கு கடல் வழி மார்க்கமாக வர முயன்றவர்களில் 6,600-க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளதாக அரசு சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையை விட இது இரு மடங்கு அதிகம் வாக்கிங் பார்டர்ஸ் (எல்லை நடைபாதை) அமைப்பு தெரிவித்துள்ளது.
2,390 முந்தைய ஆண்டில் இறப்பு எண்ணிக்கையாக இருந்தது. 2007 முதல் இந்த அமைப்பு பதிவுகளை வெளியிட்டு வருகிறது.
மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அட்லாண்டிக் கடல் மார்க்கமாக இடம்பெயர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேனரி தீவுகள் மொராக்கோவுக்கு மேற்குப் பகுதியில் உள்ளது.
புலம்பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீட்கப்பட்டவர்களின் தரவுகள்படி இந்த எண்ணிக்கையை அமைப்பு வெளியிட்டுல்ளது.
ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் 55,618 புலம்பெயர்ந்தவர்கள் கடல் வழியாக நாட்டுக்குள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.