தென் கொரியா: நாய் இறைச்சிக்குத் தடை
சியோல்: தென் கொரியாவில் நாய்களை வெட்டுவது, இறைச்சிக்காக வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது ஆகியவற்றை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
அந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த நாய் இறைச்சி உண்ணும் வழக்கத்துக்குத் தடை விதிக்கும் இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 208 வாக்குகள் பதிவாகின. எதிர்த்து ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.
அரசின் இந்த நடவடிக்கைக்கு நாய் இறைச்சி தொழில்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், இப்போதெல்லாம் பெரும்பான்மையான தென் கொரியர்கள் நாய் இறைச்சி உண்பதில்லை என்று அண்மைக்கால கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.