கடும் பொருளாதார நெருக்கடி : எரிபொருள் விலையை பாரியளவில் அதிகரித்த நாடு
எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பெப்ரவரி 1ஆம் திகதி முதல் எரிபொருள் விலை மேற்கண்டவாறு உயர்த்தப்படும்.
வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளதாகவும், எரிபொருள் விலையை தவிர, மின் கட்டணத்தையும் 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும் எனவும் கியூபா அரசு மக்களுக்கு விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளினால்
11 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட கியூபா, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கியூபாவிலும் பணவீக்கம்
கியூபாவிலும் பணவீக்கம் வேகமாக உயர்ந்துள்ளது. எரிபொருள் விலையை 500 வீதத்தால் அதிகரிப்பதன் மூலம் பணவீக்கம் மேலும் மோசமாகும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.